
திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யட்டுள்ளது.
இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.
இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.
ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான ஆணவப்படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்றபிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.
சமீபத்தில் கவின் என்ற மென்பொறியாளர் மோசமான முறையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது, நாங்குநேரி, வேங்கை வயல் என எங்கு பார்த்தாலும் சாதியத்தின் கோர முகத்தை பார்க்க முடியும். ஆனாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சாதிய ரீதியான புரிதலில் இன்னும் பின்தங்கி உள்ளன.
தமிழகத்தில் அதிலும் திருநெல்வேலி, 2019ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அதே காலகட்டத்தில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மட்டும் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் மற்றும் மாநகரம் சேர்த்து பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 633 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கியுள்ளனர்.
இந்த தரவுகள் எல்லாம் பதிவானவை மட்டுமேதான், பதிவாகாத எத்தனையோ குற்றங்கள் அப்படியே புதைக்கப்பட்டுள்ளன..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.