அண்ணன், தங்கை தூக்கிவீசப்பட்டு பலியான சிசிடிவி காட்சி...

அண்ணன், தங்கை தூக்கிவீசப்பட்டு பலியான சிசிடிவி காட்சி...
Published on
Updated on
1 min read

ஈரோடு | பவானியை அடுத்த நசியனூர் சாமிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (வயது 58). சமையல் தொழிலாளி. மேலும் இவர் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் இவருடைய தங்கை புஷ்பாவுடன் (49). நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார்.

நசியனூரில் இருந்து சாமிக்கவுண்டன்பாளையம் செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடு்ஞ்சாலையை மோட்டார்சைக்கிளில் பூரணசாமி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து பூரணசாமியும், புஷ்பாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com