மதுரை திமுக முன்னாள் உறுப்பினரை தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியது..!

மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டலத்தலைவரை பெங்களூரில்  5 இளைஞர்கள் உணவகத்தில் வைத்து விரட்டி விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு .

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. மதுரை மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டலத் தலைவராக பதவி வகித்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மண்டலத்தலைவர் ராஜபாண்டி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இதில் இருதரப்பிலும் நடந்து வரும் பழிக்குப் பழி மோதலில் ராஜபாண்டியின் மகன், வி.கே.குருசாமியின் மருமகன் உள்பட இரு தரப்பிலும் 20 க்கும் மேற்பட்டோர் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதையடுத்து இரு தரப்பினரையும் காவல்துறையினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி வழக்கில் ஜாமினில் உள்ள வீ.கே.குருசாமி கர்நாடக மாநிலம் பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்த போது திடிரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் வீ.கே.குருசாமியை உணவகத்தில்  5 மர்ம நபர்கள் குருசாமியை அரிவாளால் வெட்டும்  சிசிடிவி காட்சிகள்  தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கார்த்திக் வினோத்குமார், பிரசன்ன ஆகிய மூவரை பனஸ்வடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவர் சிறையில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com