
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் விஜயலட்சுமி தெருவை சேர்ந்த தக்ஷ்ணாமூர்த்தி என்பவரின் மனைவி சிவகாமி. சிவகாமி தனது பேத்தியை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சிவகாமி அணிந்து இருந்த 7 சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மேலும் கீழே தள்ளியதில் சிவகாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு 7 தையல் போடப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமி இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ நடந்த பகுதிக்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுப்பட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல முடிச்சூரில் 2 மாதத்திற்கு முன்பு பட்டப்பகலில் கத்தியை காட்டி செயின் பறித்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.