“காதலை கைவிட்டு விடுவோம்” - காதலியை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர்.. தன்னை விட்டு மற்றொருவரை காதலித்ததால் ஆத்திரம்!

எழிலரசன் செல்வியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் செல்வி அவற்றை தவிர்த்து வந்ததாக..
“காதலை கைவிட்டு விடுவோம்” - காதலியை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர்.. தன்னை விட்டு மற்றொருவரை காதலித்ததால் ஆத்திரம்!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் பகுதியில் வசித்து வருபவர் 22 வயதுடைய செல்வி. இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய எழிலரசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேசி பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். சிறிது காலம் நன்றாக இருந்த இவர்கள் உறவில் நாளடைவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எழிலரசனின் நடவடிக்கைகளில் மற்றம் ஏற்பட்டதால் அடிக்கடி காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த செல்வி எழிலரசனிடம் “நாம் இருவருக்கும் சரி வாராது எனவே காதலை கைவிட்டு விடுவோம்” என கூறி தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். மேலும் பலமுறை எழிலரசன் செல்வியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் செல்வி அவற்றை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் எழிலரசன் செவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Admin

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, செல்விக்கு பிரீ பையர் கேம் மூலம், கடலூரைச் சேர்ந்த 22 வயதுடைய சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் செல்வியும் சரவணனும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே நேற்று முன்தினம் கடலூரில் இருந்து காதலி செல்வியை பார்க்க சரவணன் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த, செல்வியின் முன்னாள் காதலனான திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவர் செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது செல்வி சரவணனுடன் பேசி கொண்டு இருந்ததை பார்த்த எழிலரசன் தன் காதலை துண்டித்துவிட்டு சரவணனை செல்வி காதலித்ததால் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தி உள்ளார் மேலும் செல்வியையும் தாக்கியுள்ளார்.

Admin

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்தூர் போலீசார், செல்வி மற்றும் சரவணன் ஆகியோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின், எழிலரசனை கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். முன்னாள் காதலியையும் அவரது காதலரையும் வாலிபர் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com