சிசிடிவி இல்லாததால் தொடர் வாகன திருட்டு!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேரமா இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரிகத்து வருகிறது.
சிசிடிவி இல்லாததால் தொடர் வாகன திருட்டு!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தத்தில் தொடர்ந்து வாகனங்கள் திருட்டு அதிகரித்து வருகின்றது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை ரயில் நிலையம் அருகே உள்ள வாக நிறுத்ததில் நிறுத்திவிட்டு ரயிலில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் தினமும் பல ஆயிரகணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவிட்டு வாகனங்களை நிறுத்துவதற்கான தொகையை செலுத்திவிட்டு டோக்கன் பெற்று செல்கின்றனர். ஆனால் வாகன நிறுத்ததில் சிசிடிவி கேமராங்கள் இல்லாததால் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெருவது தொடர் கதையாகி வருகிறது.

செங்கல்பட்டு அருகே அன்னாத்தூர் கிராமத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் கார்முகில் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காலை அவரது இருசக்கர வாகனத்தை ரயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்ததில் நிறுத்திவிட்டு அதற்கான தொகை15 ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு டோக்கன் பெற்று சென்றுள்ளார்.

பணி முடிந்ததும் மூன்று மணி நேரத்தில் மீண்டும் ரயில் நிலையம் வந்து டோக்கனை கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றால் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வாகனம் இல்லை உடனே கார்முகில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வாகனங்கள் நிறுத்தி இடத்தில் 15 ரூபாய் பணத்தை வசூலித்த இடத்தில் கேட்டால் சரியான பதில் இல்லை இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கார்முகில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்ததில் தினதோறும் ஆயிரக்கணகான இருசக்கர வாகனங்கள் நிற்க்கும் இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்பதும் வாகன நிறுத்துவதர்க்கு உரிய பணம் செலுத்திவிட்டு சென்றாலும் வாகனங்கள் திருடப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இருசக்கர வாகனங்களை கண்காணிக்க உடனே சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும். பணத்தை பெற்றுகொண்டு வாகனத்திற்க்கு பொருப்பு இல்லை என கூறும் நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com