ஹெராயினா இல்ல மெத்தபெட்டமைனா? - சென்னை சென்ட்ரலில் போதை பொருள் விற்பனை - திரிபுரா காதல் ஜோடி கைது!

130 கிராம் போதை பொருள் பறிமுதல்..
trugs smuggling news
trugs smuggling newsAdmin
Published on
Updated on
1 min read

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சாகுல் உசேன் மற்றும் 17 வயது இளம்பெண் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக இருந்து வருகின்றனர். சாகுல் உசேன் சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த ஏழு நாட்களாக தங்கி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தரமணி பகுதியை சேர்ந்த வட மாநிலத்தவர் மூலமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் சோதனை செய்தபோது போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 130 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஹெராயினா அல்லது மெத்தபெட்டமைனா என ஆய்வு செய்ய பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com