
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நிஷாந்தினி ஈசிஆர் சாலை வெட்டுவான்கேனியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்பு நிஷாந்தினி ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது வெட்டுவான்கேனி பிரதான சாலையில் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் சிலர் நாட்டு வெடியை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் வீசி கொண்டு சென்றுள்ளனர்.
இதில் பள்ளி மாணவி நிஷாந்தினி சென்ற ஆட்டோவில் நாட்டு வெடி வீசியதில் நிஷாந்தினி முகம் மீது வெடித்து முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சிறுமியின் தந்தை மகேஷ்குமார் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வெட்டுவான்கேனி பகுதியை சேர்ந்த 33 வயதான கோபிநாத் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த 24 வயதான வினித் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.