“தூக்கத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.. அலறியதும் தப்பியோட்டம்” - சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக...
harassment accust
harassment accust
Published on
Updated on
1 min read

சென்னை வேளச்சேரி பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், கடந்த (ஆக - 20) ஆம் தேதி இரவு வீட்டில் வழக்கம் போல தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

மகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது தந்தை மகளின் அறைக்கு சென்ற நிலையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, தனது மகளுடன் வேளச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாலுச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலுச்சாமி மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதுடன், சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேளச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com