“பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கள்ளக்காதலன்” - 6 வருடமாக இருந்த கள்ளத்தொடர்பு.. வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்!

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மோகனாவை மீட்டுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்...
Chennai Washermenpet Petrol Attack
Chennai Washermenpet Petrol Attack
Published on
Updated on
2 min read

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய மோகனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஒருவர் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மோகனா தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ஆதிலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாபுலால் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனா, பாபுலாலை விட்டு விலகியதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த நொண்டி முனிசாமி என்பவருடன் பழகி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, மோகனாவின் கணவர் மாணிக்கம் வயிற்று வலி காரணமாக கடந்த (செப் 17)- ஆம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மோகனாவை சந்தித்த பாபுலால், அவரிடம் பேச முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், மோகனா பேச முடியாது எனக் கூறிவிட்டு சென்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

Chennai Washermenpet Petrol Attack
Chennai Washermenpet Petrol Attack

இதன் காரணமாக மோகனா மீது ஆத்திரத்தில் இருந்த பாபுலால், மது போதையில் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மோகனா வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது, அவரது பின்புறமாக சென்ற பாபுலால், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.  இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மோகனாவை மீட்டுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் நபர் திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ஆதிலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாபுலால் என்பதும், அவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, நந்தியம்பாக்கத்தில் பதுங்கியிருந்த பாபுலாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும், பாபுலால் மீது ஏற்கெனவே எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com