
நேற்று உத்தரகாண்ட் காவல்துறையினர் பாஜக -வின் மகிளா மோர்ச்சாவின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளினியையும் அவரது காதலனையும் கைது செய்துள்ளனர்.
இந்த கைதின் பின்னணி தான் நம்மை ரத்தம் உறையச்செய்ய போகிறது.
பாஜக மகிளா மோர்ச்சாவின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றிய ஸ்மிரித்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார். அவரது மகன் தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில் அவர் தனது மகளை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
நாளடைவில் சுமித் பட்வால் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம், காதலாக மாற, இவர் தனது 13 வயது மகளை அழைத்துக்கொண்டு காதலனோடு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், ஸ்மிரிதி தனது காதலர் சுமித் பட்வால் மற்றும் அவரது நண்பர் சுபம் ஆகியோருடன் பிஹெச்இஎல் ஸ்டேடியம் பகுதிக்கு காரில் வெளியே செல்வதாகக் கூறி சிமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, மது அருந்திய பின்னர், இரண்டு பேரும் சிறுமியை அவரது தாயின் சம்மதத்துடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆக்ரா, பிருந்தாவனம் மற்றும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டல்களிலும் குழந்தை இதேபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆக்கப்பட்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குறித்து யாரிடமாவது தெரிவித்தால், “உன்னையும் உன் தந்தையையும் கொன்று விடுவோம்” என குழந்தையை மிரட்டியுள்ளன கயவர்கள்.
அந்த சிறுமி மொத்தம் ஏழு அல்லது எட்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ந்துபோன தந்தை
சில மாதங்களாக மகள் மிகவும் சோகமாக இருப்பதாய் உணர்ந்த தந்தை அவளிடம் பேச்சுக்கொடுத்துள்ளார், அப்போது அந்த சிறுமி கணீர் மல்க தனக்கு நடந்த கொடூரத்தை விவரிக்கவே, அதிர்ச்சி அடைந்த தந்தை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ராணிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராணிப்பூர் காவல் நிலையம் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. சிறுமியின் மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, போலீசார் இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உள்ளது.
கொடூரத்தை நிகழ்த்திய தாய்
ஸ்மிரிதி தனது மகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தை இயல்பாக்க முயன்றதாகவும், உடல் உறவுகள் "இயல்பானது" என்று கூறிவிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார்.
ஒவ்வொரு முறையும், அவளுக்கு மது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த கொடூரமான செயல்களின் போது அந்த கொடூர தையும் உடனிருந்துள்ளார்.
ஹரித்வாரின் சித்ரா டாக்கீஸ் பாதையில் தனது காதலரான சுமித் பட்வாலுடன் குத்தகைக்கு ஒரு ஹோட்டலை நடத்தி வந்தார் என்பதும், இந்த ஹோட்டலில்தான் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்