நகைக்காகவா இவ்வளவும்? "தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை போய்” - எந்த தாய்க்கும் நடக்கக்கூடாத கொடூரம்..!

வீட்டில் பார்வதி குழந்தை ஆதிராவோடு தூங்கிக்கொண்டிருந்தார், அப்போது வீட்டின் சுவர் ஏரி குதித்து வந்த மர்ம நபர்...
"Toddler Killed by Unidentified Attacker During Attempted Theft of Mother's Gold Chain"
"Toddler Killed by Unidentified Attacker During Attempted Theft of Mother's Gold Chain"
Published on
Updated on
1 min read

திருச்செந்தூரில் நகைக்காக 2.1/2 வயது குழந்தை கழுத்தை  நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பெரியசாமி இவர் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வதி மனைவியும் ஆதிரா (2.1/2) பெண் குழந்தை உள்ளது. 

நேற்று காலை வழக்கம்போல் பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் பார்வதி குழந்தை ஆதிராவோடு தூங்கிக்கொண்டிருந்தார், அப்போது வீட்டின் சுவர் ஏரி குதித்து வந்த மர்ம நபர் பார்வதி கழுத்தில் இருந்த தங்கத் தாலியை கேட்டு குழந்தை முகத்தில் துணியை வைத்து அமுக்கி உள்ளார். 

இதனால் பதறிய பார்வதி தாலியை உடனே கழற்றி கழற்றி கொடுத்துள்ளார். அப்போது குழந்தை மயங்கியதும் மர்ம நபர் குழந்தையும் தாலியும் கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்ததும் பார்வதி மேலும் அலறித்துடித்துள்ளார். அலறல்  சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் குழந்தை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் குழந்தையின் பெற்றோரிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டப்பகலில் நகைக்காக குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com