ஆண்களை வசியம் செய்ய 31 கோடி ரூபாய் கட்டணம்! சீனப் பெண்களை ஏமாற்றிய 'செக்ஸ் குரு' - சமூக வலைதளங்களில் இருந்து அதிரடி நீக்கம்!

இதன் விளைவாக, அவர் பயன்படுத்தி வந்த முக்கியச் சமூக வலைதளக் கணக்குகளைச் சீன அரசு தற்போது முடக்கியுள்ளது...
ஆண்களை வசியம் செய்ய 31 கோடி ரூபாய் கட்டணம்! சீனப் பெண்களை ஏமாற்றிய 'செக்ஸ் குரு' - சமூக வலைதளங்களில் இருந்து அதிரடி நீக்கம்!
Published on
Updated on
1 min read

சீனாவில் (Ququ) என்ற பெயரில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஒரு பெண் ஆலோசகர். இவர் பெண்களின் திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுடன், செல்வந்தர்களான ஆண்களை எப்படிக் கவர்ந்து திருமணம் செய்வது என்பது குறித்த ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தார். இதற்காக அவர் ஒரு நபரிடம் இருந்து பல லட்ச ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இவர் சுமார் 31 கோடி ரூபாய் (26 மில்லியன் யுவான்) ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

இவரது ஆலோசனைகள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்தன. குறிப்பாக, காதலிக்கும் ஆண்கள் தங்களுக்குப் பரிசாக அளிக்கும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தைச் சரியான முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்து அவர் பெண்களுக்குப் பயிற்சி அளித்தார். இவரது பேச்சுகள் பெண்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்வதாகவும், சமூகத்தின் அறநெறிகளுக்கு எதிராகவும் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதன் விளைவாக, அவர் பயன்படுத்தி வந்த முக்கியச் சமூக வலைதளக் கணக்குகளைச் சீன அரசு தற்போது முடக்கியுள்ளது.

குயுயுவின் செயல்பாடுகள் சீனப் பண்பாட்டிற்கும், இளைய தலைமுறையினரின் மனநிலைக்கும் கேடு விளைவிப்பதாக அந்நாட்டு இணையக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக 'பணத்திற்காகக் காதல்' என்ற பிம்பத்தை அவர் உருவாக்கியது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. ஏற்கனவே அவரது கணக்குகள் பலமுறை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற ஆலோசனைகளை வழங்கும் மற்ற நபர்கள் குறித்தும் சீனா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com