ஸ்டார் ஹோட்டலில் "பார்ட்டி".. ஆடி காரில் "அட்ராசிட்டி" செய்த சினிமா டான்சர் - தட்டித் தூக்கிய போலீஸ்! பேர் என்னவோ "பஞ்சு மிட்டாயாம்"!

தப்பி ஓடிய சினிமா டான்சர் கானா பாடகர் உள்பட 7 பேரை கைது செய்தது காவல்துறை....
ஸ்டார் ஹோட்டலில் "பார்ட்டி".. ஆடி காரில் "அட்ராசிட்டி" செய்த சினிமா டான்சர் - தட்டித் தூக்கிய போலீஸ்! பேர் என்னவோ "பஞ்சு மிட்டாயாம்"!
Published on
Updated on
2 min read

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோசப் எடிசன், மணிமாறன். இருவரும் மதுபோதையில் பைக்கில் கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் ஓட்டலில் உணவு சாப்பிட வந்தனர். அப்போது ஆடிக் காரில் 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

அந்த கும்பலும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜோசப் எடிசன், மணிமாறனுடன் ஆடிக் காரில் வந்த கும்பல் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அந்த கும்பல் அங்கிருந்த பைக்கை தூக்கி ஜோசப் எடிசன் மீது தூக்கி போட்டது. ஹெல்மெட்டால் மணிமாறனை தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

இது குறித்து தகவல் அறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜோசப் எடிசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மணிமாறனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தப்பி ஓடிய கும்பலின் கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் தேடினர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா டான்சர் அய்யப்பன் என்ற டான்சர் மோரீஸ் என்பவர் தான் ஆடிக்காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவரது செல்போன் டவரை வைத்து போலீசார் இருக்கும் இடத்தை தேடினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று தாக்குதல் நடத்தியதாக 7 பேரை கைது செய்து சிஎம்பிடி காவல் நிலைய்த்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

கைதானவர்கள் சினிமா டான்சர் அய்யப்பன் என்ற டான்சர் மோரீஸ், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கிண்டி ரேஸ்கிளப் ஊழியர் கவுதம், கிண்டியைச் சேர்ந்த வேலாயுதம், வேளச்சேரியைச் சேர்ந்த குமார், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி, அருண்குமார், பல்லாவரத்தைச் சேர்ந்த கானா பாடகர் சந்தோஷ் என்ற பஞ்சு மிட்டாய் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: "கடைசியாக" தோனியைப் பார்த்த சந்தோஷம்.. 2 கல்லூரி மாணவர்களின் உயிரை பறித்த "எமன்"! நள்ளிரவில் நடந்த கொடூரம்

இதில் விக்னேஷின் பிறந்த நாளை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைதானவர்களுடன் கொண்டாடினார். கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டலில் கொண்டாடி விட்டு செல்லும் போது தான் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆடி காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 7 பேர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com