கல்லூரி மாணவர் கல்லால் அடித்துக்கொலை...கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அரசுக்கல்லூரி மாணவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் கல்லால் அடித்துக்கொலை...கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வள்ளுவர் நகரில் உள்ள முனீஸ்வரன் கோவில் பின்பாக, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ஒசூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது..

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்து இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தை சேர்ந்த மகபூப் பாஷா என்பவரின் மகன் சேக் முகமது அப்சல் என்பதும், இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா என்பவரது வீட்டில் தங்கியிருந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட ஷேக் முகமது அப்சல், ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்ததாகவும், படித்துக்கொண்டே தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணி வரை பகுதி நேரமாக பணியாற்றுவதும் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று கல்லூரி முடித்து விட்டு தொழிற்சாலைக்கு சென்றவர் காலை முதல் வீடு திரும்பாத நிலையில், சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com