புறநகர் ரெயிலில் பயங்கர ஆயுதங்களுடன் தொடரும் மாணவர்களின் கோஷ்டி மோதல்; மக்கள் அச்சம்!

புறநகர் ரெயிலில் பயங்கர ஆயுதங்களுடன் தொடரும் மாணவர்களின் கோஷ்டி மோதல்; மக்கள் அச்சம்!
Published on
Updated on
1 min read

சென்னையில் புறநகர் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள், ஒருவருக்கொருவர் தாங்கிக்கொள்ளும் சம்பவம் அவ்வவ்போது அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை சென்ட்ரலில் இருந்து, சூளூர்பேட்டை வரை செல்லும் புறநகர் ரயில், விம்கோ நகர் நிறுத்தத்தில் நேற்று சென்றுகொண்டிருக்கும் பொழுது, கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

 தாக்குதலின் போது வீசப்பட்ட கற்கள் 

இதில், மாணவர்கள் தங்களுடன் வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலைக் கண்டு, ரயிலில் பயணித்த பயணிகள் அலறி அடித்து ஓடியுள்ளனர். 

மாணவர்களுக்கிடையே நடந்த தாக்குதலில், ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர். தாக்குதலின் போது அருகே இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கொருக்குப்பேட்டை ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து பிரசிடென்சி காலேஜ் சேர்ந்த மகேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் கிரிதரன் என்ற மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கைதான மாணவர்கள்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com