காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவா்கள்...

காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு வாங்குவதற்காக ஆடு திருடிய இரண்டு கல்லூரி மாணவர்களை காவல்துறையினா் கைது செய்தனா்.
காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவா்கள்...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது மலையரசன் குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் இன்று அதிகாலையில் ரேணுகா என்பதற்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை உயர்ரக பல்சர் இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்து ரேணுகா திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடினை திருடிச் சென்ற கல்லூரி மாணவன் அரவிந்த்குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தன் காதலிக்கு காதல் பரிசு  வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால் ஆடினை திருடியதாக கூறியுள்ளார். அதற்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் செஞ்சி பீரங்கி மேடு பகுதியை சார்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த்குமார் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பிடித்து வருகிறான். செஞ்சி அடுத்து உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவன் மோகன், என்பது தெரிய வந்தது.

கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற  சம்பவங்கள் நடைபெற்று இருப்பதால் அந்த ஆடு திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள்  பயன்படுத்திய விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com