மினி வேன் மீது கன்டிடெய்னர் லாரி மோதி 11 பேர் படுகாயம்..

நாட்டறம்பள்ளி அருகே ஐயப்பன் கோயில் பக்தர்கள் சென்று மினி வேன் மீது கன்டிடெய்னர் லாரி மோதியதில் விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
மினி வேன் மீது கன்டிடெய்னர் லாரி மோதி 11 பேர் படுகாயம்..
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் |  நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பஸ் நிலையம் அருகே இன்று காலை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாத விதமாக பக்கவாட்டில் கன்டெய்னர் லாரி திரும்பிய பொழுது பின்னால் சென்று கொண்டு இருந்த மினி வேனில் வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலிசார் விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜயப்பன பக்தர்கள் 22 பேர் கேரளா மாநிலம் சபரிமலை கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வேனில் பயணம் செய்த சூரியா, விஜய், சத்தியராஜ் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர் லேசான காயம் அடைந்தவர்கள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கும் பலத்த படுகாயம் அடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தால் போக்குவரத்து சிறுது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com