"கொரோனா பாதிப்பு".. தாய் மரணம்.. மகளுக்கு 6 மாத காலம் பாலியல் தொல்லை... 61 பேரை கொத்தாக கைது செய்த போலீஸ்!!

கொரோனா சிகிச்சைக்காக வந்த சிறுமியை 6 மாதங்களாக பாலியல் தொழில் ஈடுபடுத்திய 61 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கொரோனா பாதிப்பு".. தாய் மரணம்.. மகளுக்கு 6 மாத காலம் பாலியல் தொல்லை...  61 பேரை கொத்தாக கைது செய்த போலீஸ்!!
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வந்த நிலையில், அங்கு பணிப்புரியும் ஊழியர் சுவர்ணகுமார்  என்பவர் உங்கள் மகளுக்கு நாட்டு மருந்து மூலம் குணம்படுத்தி விடலாம் என சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிறுமியின் தந்தை மகளை சுவர்ணகுமாரிடம் ஒப்படைத்துள்ளார். இதனை தொடர்ந்து  சுவர்ணகுமார் சிறுமியை அழைத்து சென்று  விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றி பாலியல் தொழில் ஈடுபடுத்தியுளார்.

இதனால் சிறுமின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. பின்னர், அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது  தந்தையிடம் நடந்த விஷியத்தை கூறி அழுதுள்ளார்..

இதனை கேட்டு அதிர்ந்து போன தந்தை, தனது மகளுக்கு  நடந்த கொடுமை குறித்து  குண்டூர் போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சுவர்ணகுமார் உட்பட 21 பேரை கைது செய்து நீதிமதி முன் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில், 6 மாதமாக சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருந்ததை கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். பின்னர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com