திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட விரிசல்...ஆத்திரத்தில் வெட்டிய காதலன்...உயிரிழந்த பெண்!

திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட விரிசல்...ஆத்திரத்தில் வெட்டிய காதலன்...உயிரிழந்த பெண்!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் கள்ளக்காதல் விவகாரத்தில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்காதலி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.  இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸ்ஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார். இதில் குட்டுலுவுக்கும்,  துவர்க்கா பார் மனைவி சுமிதா பாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி கள்ளக்காதலன் குட்டுலு கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கள்ளக் காதலியின் இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு கள்ளக் காதலி சுமிதாபாரையும் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த சுமிதா பாரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார், 4தனிப்படைகள் அமைத்து தலைமறைவான கள்ளக்காதலன் குட்டுலுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்காதலி சுமிதா பார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com