வங்கியில் தொடரும் போலி நகை மோசடிகள்...!!

வங்கியில் தொடரும் போலி நகை மோசடிகள்...!!

காரைக்காலில் போலி நகை மோசடி விவகாரத்தில் மேலும் மூவர் மீது வழக்கு பதிவு. அடுக்கடுக்கான புகார்களை கூறும் வங்கிகள்.

தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பியால் ஆனா போலி நகைகளை உருவாக்கி , வங்கிகள், அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மோசடி வழக்கில் இதுவரை நிரவி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட், காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித்தெருவை சேர்ந்த பரசுராம், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில், காரைக்கால் சேர்ந்த ரமேஷ், காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.  ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதாவது அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பல லட்சம் மோசடி என வந்த புகார் அடிப்படையில் தேவதாஸ் என்பவர் காரைக்காலில் தனியார் வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய்  பெற்றதும், கடலூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலி நகைகளை செய்து கொடுத்தவரும், சோழன் என்பவர் போலி நகைகள் செய்ய மூல பொருட்கள் கொடுத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வங்கி கிளையில் காரைக்கால் தேவதாஸ் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 12 பவுன் கொண்ட செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.  இதுநாள் வரை தேவதாஸ் நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் கோவிந்தராமாநுஜம் நகை பரிசோதித்த போது போலி நகை என்பதை கண்டறிந்துள்ளார்.  இதுகுறித்து வங்கி மேலாளர் கோவிந்தராமாநுஜம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேவதாஸை போலீசார் தேடி கைது செய்தனர். 

மேலும்  இந்த நகைகளை செய்து கொடுத்த கடலூரை சேர்ந்த சிவக்குமார் மற்றும் இவர்களுக்கு  மூலப்பொருட்கள் கொடுத்த சோழன் என மூன்று நபர்களை இன்று கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  மேலும் இவ்வழக்கில் முக்கிய புள்ளியான பெண் தொழிலதிபர் புவனேஸ்வரியை மூன்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com