திருநங்கையை பீனாயில் குடிக்கசெய்த குற்றவாளிகள்...காரணம் என்ன?

திருநங்கையை பீனாயில் குடிக்கசெய்த குற்றவாளிகள்...காரணம் என்ன?

Published on

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் திருநங்கை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புகாரை வாபஸ் பெறாததால் குற்றவாளிகள் மூவரும் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயம் அடைய செய்தனர். 

காயமடைந்த திருநங்கை போலிசாரால் மீட்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். புகாரை வாபஸ் பெறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் புகாரை வாபஸ் பெறாததால் திருநங்கையை கட்டாயப்படுத்தி பீனைல் குடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். புகாரின் பேரில், சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது 307 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com