புதுசா இருக்கே.. கள்ளக்காதல் தெரிந்தால் தான் இதெல்லாம் நடக்கும்... தெரியாமலும்!! பழனியில் கொடுமை

பழனி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு மர்ம மரணம் என நாகடமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். 
புதுசா இருக்கே.. கள்ளக்காதல் தெரிந்தால் தான் இதெல்லாம் நடக்கும்... தெரியாமலும்!!  பழனியில் கொடுமை
Published on
Updated on
1 min read

பழனி அருகே ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார்.

இது குறித்து ஜெகதா பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரில், தனது கணவர் அவரது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை என்று கூயிருக்கிறார். இந்நிலையில், செல்வராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருவுத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், செல்வராஜின் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், தனி படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையாக, ஜெகதாவின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், ஜெகதா அடிக்கடி ஒரு நபருடன் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை விசாரித்ததில் ஜெகதாதான் செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகதாவிற்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஜெகதீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது தெரியவந்தது.

மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், ஜெகதா, ஆவது தாய் ராஜம்மாள், கள்ளக்காதலன் ஜெகதீஷ் ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மூன்று போரையும் போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com