கடலூர்: பணியில் தூங்கிய கேட் கீப்பர்..! 50 மீட்டர் இழுத்துச்செல்லப்பட் பள்ளி வாகனம்.. “சிதைந்த பிஞ்சு உயிர்கள்”!!

எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பள்ளி குழந்தைகள் நிவாஸ், சாருமதி என்ற இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
cud accident track
cud accident track
Published on
Updated on
1 min read

கடலூர்  அருகே செம்மகுப்பம் பகுதியில்  ரயில்வே கேட்டை கடக்க முயன்ற  தனியார் பள்ளி வாகனம்  விபத்து.எதிரே வந்த  எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பள்ளி குழந்தைகள் நிவாஸ், சாருமதி என்ற இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்:

கடலூர்,செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து சம்பவ இடத்திற்கு விரைந்தது ரயில்வே பாதுகாப்பு குழு. குறிப்பிட்ட நேரத்தில் கேட் கீப்பர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் இதுவரை 6 -பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

கேட் கீப்பரின் அலட்சியம்!!

சிதம்பரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டி மோதியத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆளில்லாத நேரத்தில் ரயில்வே கேட்டை கடக்க பள்ளி வேன் முயற்சித்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட சமையத்தில் கேட் கீப்பர் அங்கு இல்லாததால் தான் இந்த கோர விபத்து நடந்தது. அவர் எங்கோ சென்று தூங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. பணி நேரத்தில் கேட் கீப்பர் தூங்கியதால் பரிதாபமாக 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com