அஜித் குமாரை கண்மூடித்தனமாக் தாக்கிய போலீசார்..! பதைபதைக்கும் வீடியோ வீடியோ வெளியானது...

அஜித்குமாரை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து தென்னந்தோப்பில் வைத்து அடிக்கும் காட்சி வெளியாகி ...
அஜித் குமாரை கண்மூடித்தனமாக் தாக்கிய போலீசார்..! பதைபதைக்கும் வீடியோ வீடியோ வெளியானது...
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27).  இவர் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் இருந்த  14 பவுன் நகை காணாமல் போனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்தில் காவல்துறை ஆட்சி நடக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் அஜித்குமாரை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து தென்னந்தோப்பில் வைத்து அடிக்கும் காட்சி வெளியாகி அனைவரின் மனதையும் கலங்க செய்திருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com