“பாலியல் வன்கொடுமை செய்தாரா ‘RAPIDO’ ஓட்டுநர்?” - இளம்பெண் குற்றச்சாட்டு.. வாலிபரின் வாக்குமூலத்தால் ஏற்பட்ட குழப்பம்!

இளம்பெண் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தான் தரவில்லை என்பதால் உடனடியாக அவரது கணவரிடம்...
“பாலியல் வன்கொடுமை செய்தாரா ‘RAPIDO’ ஓட்டுநர்?” - இளம்பெண் குற்றச்சாட்டு.. வாலிபரின் வாக்குமூலத்தால் ஏற்பட்ட குழப்பம்!
Published on
Updated on
1 min read

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ராபிடோ வாகனத்தை புக் செய்து பள்ளிக்கரணைக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வேளச்சேரி பாலத்தில் இருந்து அதே ராபிடோ ஓட்டுனரை வரவழைத்து வீட்டிற்கு வந்துள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கிய இளம் பெண் அவரது கணவரிடம் தன்னை ரேபிடோ டிரைவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் கணவர் இது குறித்து வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராபிடோ ஓட்டுநரான தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சிவகுமாரை கைது செய்தனர். பின்னர் சிவகுமார் இடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் அளித்த தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விசாரணையில் சிவகுமார் “முதலில் இளம் பெண்ணை பள்ளிக்கரணைக்கு அழைத்து சென்றதாகவும் பின்னர் 20 நிமிடத்தில் மீண்டும் தன்னை அழைத்து வேளச்சேரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியதாகவும் அப்போது வரும் வழியில் இளம் பெண் தன்னிடம் வாகனம் ஓட்ட கற்றுத் தருமாறு கேட்டார். எனவே தான் வாகனத்தை ஓட்ட கற்றுக் கொடுத்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு உடலுறவு மேற்கொண்டதாகவும், பின்னர் வீட்டில் இறக்கிவிடும் சமயத்தில் தன்னிடம் இளம்பெண் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தான் தரவில்லை என்பதால் உடனடியாக அவரது கணவரிடம் நான் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் அதனை கேட்டு பெண்ணின் கணவர் தன்னை கல்லால் அடித்து உங்களிடம் ஒப்படைத்தார் என தெரிவித்துள்ளார்”. இருப்பினும் போலீசார் தொடர்ந்து ராபிடோ ஓட்டுநர் மற்றும் இளம் பெண்ணிடம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிய நிலையில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com