

ஆந்திர மாநிலம், வேப்பங் கொண்ட அடுத்த அப்பனா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லலிதா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணி அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாய் மகாலட்சுமி சுப்ரமணியுடன் வசித்து வந்தார். மாமியார் மற்றும் மருமகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமியின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது லலிதா அவர்களுக்கு சமையல் செய்து உணவு அள்ளித்தா நிலையில் அந்த சாப்பாடு நன்றாக இல்லை என மகாலட்சுமி உறவினர்கள் முன்னிலையில் லலிதாவை திட்டியதாக சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து மாமியார் மகாலட்சுமி அவரது மருமாய் குறை குறி வந்திருக்கிறார். மேலும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் அவரை பற்றி தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே இருந்த வாக்குவாதமான தகராறாக மாறியுள்ளது. எனேவ வீட்டில் தினந்தோறும் சண்டை நடந்து வந்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த லலிதா தனது மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வைத்த லலிதா மறுநாள் தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடியுள்ளார். மேலும் தனது மாமியாரை விளையாட அழைத்த லலிதா அவரது கண்களை கட்டி அவரை நாற்காலி அமரவைத்து கயிற்றினால் கைகால்களை கட்டி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர் மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் “டிவி போடா போனாங்க டிவி வெடித்து தீ பத்திக்கிச்சி” என தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மகாலட்சுமி இறந்த அறையில் இருந்து வந்த பெட்ரோல் வாசனையால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் லலிதா காணாது மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத்தொடர்ந்து லலிதாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.