மணமகள் மீது தெறித்த ரத்தம்..!! “மண மேடையிலே மாப்பிள்ளைக்கு இப்படி ஆயிடுச்சே..” 1கி.மீ பின் தொடர்ந்த டிரோன் கேமரா!!

தற்போதைய காலகட்டங்களில் திருமண விழாக்களில் டி.ஜே வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்த திருமணத்திலும் ...
drone captured ac crime
drone captured ac crime
Published on
Updated on
1 min read

நாடு முழுக்க அதிக  அளவில் முன்பகை காரணமாகவோ அல்லது வாக்குவாதத்திலோ, மதுபோதையிலோ இளைஞர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. திருமணம் போன்றொரு பலபேர் கூடும் இடத்தில், அதுவும் மணமகன் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு, ஒரு குற்றங்கள் மலிந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம் . அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் நடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு அமராவதி அருகே உள்ள பத்னேராவில் உள்ள சாஹில் லானில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. மணமகன் சுஜல் சமுத்ரே (22) தனது புது மனைவியுடன், மேடையில் நின்றபடி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராகவ்  என்கிற ஜித்தேந்திர பக்ஷி விறு விறுவென மணமேடைக்கு சென்று மணமகனை சரமாரியாக குத்திவிட்டு தன் நண்பரோடு இருசக்கர வாகனத்தில், தப்பி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கு பறந்துகொண்டிருந்த டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. 

முன்பகை காரணமா!?

தற்போதைய காலகட்டங்களில் திருமண விழாக்களில் டிஜே வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்த திருமணத்திலும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிஜே சேவைகளுக்கான கட்டணம் தருவதில் சுஹல்க்கும் ராகவ் -க்கும் இடையே  தகராறு ஏற்பட்டதாகவும் அதில்  சுஹல் ராகவை தவறாக பேசி அவர் மீது செல்போனை வீசியடித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த தகராறில் சுஹல் -ன் நண்பர்கள் பத்னேராவில் உள்ள ராகேவின் வீட்டை சேதப்படுத்தி, தங்கள் பைக்கை தீ வைத்து எரித்ததாகவும்  கூறப்படுகிறது. இதனால்தான் ராகவ் மணமகனின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். 

காயம்பட்ட மணமகன் அமராவதியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த மணப்பெண்ணும், சுஹலின்  தாயும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். தாக்குதல் நடந்த உடனையே அரங்கத்தில் இருந்த டிரோன் கேமரா ராகவ் வாகனத்தை பின்தொடர ஆரம்பித்துள்ளது. 1 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணித்த கேமரா அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com