தர்மபுரி: பார்சல் டெலிவரி அலுவலகத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை!!

தர்மபுரி: பார்சல் டெலிவரி அலுவலகத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை!!
Published on
Updated on
1 min read

தர்மபுரியில் தனியார் பார்சல் டெலிவரி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 11 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பார்சல் டெலிவரி அலுவலகம்

தர்மபுரி அடுத்த சவுலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சங்கர் என்பவர் தனியார் பார்சல் டெலிவரி அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு டெலிவரி செய்த பணத்தை லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.

11 லட்சம் பணம் கொள்ளை

இதனைத்தொடர்ந்து, இந்த டெலிவரி அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி காலை வணக்கம் போல் அலுவலகத்தை திறப்பதற்காக சங்கர் வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கர், உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 11 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வழக்கு பதிவு

இந்த சம்பவம் குறித்து சங்கர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், தனியார் பார்சல் டெலிவரி அலுவலகத்தில் நுழைந்து ஒருவர் லாக்கர் மற்றும் பணத்தை திருடி செல்லும் காட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பணம் மற்றும் லாக்கரை திருடி சென்ற மர்ம நபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com