கள்ளக்காதலியின் மாமனாரை… இரும்பு ராடால் அடித்து கொலை? 60 வயது முதியவர் உயிரிழப்பால்.. திருபத்தூரில் அதிர்ச்சி!

அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்கிற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது
Tirupattur murder
Published on: 
Updated on: 
1 min read

திருப்பத்தூர் கந்திலி அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் மகன் நந்தியப்பன் (50) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்கிற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரோஜாவிற்கும் நந்தியப்பனுக்கும் இடையே கடந்த 23ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஜாவின் சின்ன மாமனாரான அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வம் (60) என்பவர் தகராறை தட்டிக்கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நந்தியப்பன் இரும்பு ராடால் முதியவர் செல்வத்தை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து முதியவரின் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த முதியவர் செல்வத்தின் உடலை மீட்டு‌ பிரோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கந்திலி போலீசார் நந்தியப்பன் மீது வழக்குபதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.