பில் கலெக்டரை தாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினர்!
நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பில் கலெக்டர் மீது திமுக நகர்மன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை நகராட்சியில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பில் கலெக்டர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல் நடத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சியின் கீழ் உள்ள 7 வது வார்டின் கவுன்சிலராக பதவி வகிப்பவர் காந்தி. இவர் அவரது வார்டிற்குட்பட்ட வீடு ஒன்றிற்கு வீட்டு வரி ரசிது பெற பணம் கட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை நகராட்சியில் பில் கலெக்டராக பணியிலிருந்த சரவணனிடம் கட்டி நீண்ட நாட்களாகியும் ரசீது வழங்காமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர் காந்தி பில் கலெக்டர் சரவணனிடம் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கவுன்சிலர் காந்தி சரவணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில் இது குறித்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கவுன்சிலர் காந்தி நகர்மன்ற தலைவரிடமும், பில் கலெக்டர் சரவணன் காவல் நிலையத்திலும் பரஸ்பரம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.