எனக்கு வாழ பிடிக்கவில்லை...விபரீத முடிவெடுத்த திமுக பெண் கவுன்சிலர் மகன்!

எனக்கு வாழ பிடிக்கவில்லை...விபரீத முடிவெடுத்த திமுக பெண் கவுன்சிலர் மகன்!

Published on

சென்னையில், திமுக கவுன்சிலரின் மகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள் பண்டரிநாதன் - பிரேமலதா தம்பதி.  தாம்பரம் மாநகராட்சியின் 18-வது வார்டு உறுப்பினராக உள்ள பிரேமலதாவின் மகன் கோபிநாத், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு நண்பர்களிடம் பேசிவிட்டு வருவதாக மாடிக்கு சென்ற கோபிநாத் நீண்ட எறம் ஆகியும் கீழே இறங்கவில்லை என்பதால், சந்தேகமடைந்த தாயார் பிரேமலதா, மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தனது மகன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே கோபிநாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார், கோபிநாத்தின் அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு ஒரு கடிதம் சிக்கியது, அதில் ”எனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும், இந்த வாழ்க்கை தனக்கு பிடிக்கவில்லை எனவும்” இறப்பதற்கு முன்பு கோபிநாத் உருக்கமாக எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதம் கோபிநாத் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, கோபிநாத் கடந்த சில நாட்களாகவே, மன அழுத்ததில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com