“என் பையன் உன்கிட்ட வேற மாதிரி எதிர் பார்க்கிறான்” - மருமகள்கிட்ட போய்.. தொடரும் வரதட்சணை கொடுமை! கதறி அழும் பெற்றோர்

இவர்கள் என்னை திட்டமிட்டு தான் கல்யாணம் செய்திருக்கின்றனர், பகலில் இவர்களும் இரவில் என் கணவனும் மாற்றி மாற்றி சித்ரவதை செய்றாங்க....
victin rithanya
victin rithanya
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவரின்  மகள்தான்  ரிதன்யா (27). இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவுகளோடு தனது திருமண வாழ்வை துவங்கியவருக்கு தனது கணவானாலே தனது எதிர்காலம் அழியப்போகிறது என தெரியாமல் இருந்துள்ளார்.  ரிதன்யா  திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் (28) என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். 

500 பவுன் நகை 

இந்நிலையில் ரிதன்யாவின் திருமணத்தின்போது 500 பவுன் நகை போடுவதாக சொல்லி இருக்கின்றனர், அதுமட்டுமின்றி 70 லட்சத்தில் கார் என ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்தின்போது 300 பவுன் நகைத்தான் போட்டுள்ளார். மீதமுள்ள 200 பவுன் நகையை கேட்டு மிகவும் துன்புறுத்தியுள்ளனர். தினமும் 3 மணிநேரம் கணவன், மாமனார், மாமியார் நிற்க வைத்து பல கேள்விகளை கேட்டு உளவியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் 

கவினுக்கு வீட்டு வாடகை மூலம் வருமானம் வருவதால் வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் எந்நேரமும் ரிதன்யாவுக்கு பாலியல் துன்புறுத்தல்  கொடுத்துள்ளார். “ அவளை எங்கேயுமே வெளியில் கூட்டிச் செல்லவில்லை. இரவெல்லாம் அவன் படுத்திய பாட்டில் உடலெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனையும் என்னிடம் காட்டாமல் மாமியாரிடம் காட்டியுள்ளார், ஆனால் குடும்பம் என்றால் அப்படித்தானே இருக்கும் எனக்கூறியுள்ளார். அவர் மாமனார் அதற்கும் ஒரு படி மேலே பொய் “என் மகன் படுக்கையறையில் உன்னிடம் வேறு மாதிரி எதிர்பார்க்கிறான்” இது ஒரு மாமனார் பேசும் பேச்சா” என கூறி கண்ணீர் மல்க ரிதன்யாவின் அம்மா பேட்டி அளித்துள்ளார்.

என் பொண்ணுக்கு நடந்தது போல்..

இந்த துன்புறுத்தல்கள் குறித்து ஏற்கனவே பலமுறை  தன் பெற்றோரிடம் கூறியுள்ளார், “ஆனால் அவரது உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்” ஆனால் நாளுக்கு நாள் இவர்களின் டார்ச்சர் அதிகமாகி உள்ளது. அதனால் மனமுடைந்த ரிதன்யா “இவர்கள் என்னை திட்டமிட்டு தான் கல்யாணம் செய்திருக்கின்றனர், பகலில் இவர்களும் இரவில் என் கணவனும் மாற்றி மாற்றி சித்ரவதை செய்றாங்க. என்னால முடியல. உங்களுக்கு இதுக்கு மேலையும் என்னால அவமானம் வேண்டாம். நான் போறேன் பா.. என்ன மணிச்சருங்க” என வாட்ஸ் அப் -ல் வாய்ஸ் நோட் போட்டு விட்டு தற்கொலைக்கு செய்துகொண்டுள்ளார்.

“நல்ல குடும்பம் என்று நினைத்துதான் மக்களை கட்டிக்கொடுத்தேன். இப்படி 2 மாதத்திலே என் மக்களை இழந்துவிட்டேன்” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் கணவன் கவின், மாமனார் ஈஸ்வரபாண்டி, மாமியார் சித்ரா தேசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com