சென்னை டாஸ்மாக் கடை ஒன்றில் அண்ணன், தங்கை இருவரும் மதுபோதையில் கடைக்குள் நுழைந்து அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை ஆபாசமான வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி இவரது வயது 39. இவர் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு (நவ 4)அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவரது தங்கை பாவ்யா என்கிற இருவரை கடைக்குள் நுழைந்துள்ளனர். இருவரும் போதையில் மதுபான கூடத்துக்குள் புகுந்து மது அருந்தி கொண்டிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியுள்ளனர்.
அதன் பின்னர், பீர் அருந்தி கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து பாட்டிலை பிடுங்கிய பாவ்யா, அதை உடைத்து அங்கே நின்று கொண்டிருந்த பார் ஊழியர் ராம்கியை குத்த முயற்சித்துள்ளார். அந்த வீடியோவில் அவர், "அடிச்சிட்டு உள்ள இருப்பானா? அவனை வெளிய வரச்சொல்லு.. என் போன உடைச்சிட்டான்" என்று பாரில் மது அருந்தி கொண்டிருந்தவர்களிடம் அவர் தெரிவிப்பதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அண்ணன் தங்கை இருவரையும் காவல்நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று கூறி அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் அண்ணன் தங்கை இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையில் மதுபான கூடத்துக்கு வந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓடியதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ராம்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் திவாகர் அவரது தங்கை பாவ்யா இருவர் மீதும் பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இருவர் மீதும், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், இவரையும் போலீசார் தேடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.