“நீ எப்படிடா என் ஆள அடிக்கலாம்” - நடுரோட்டில் பெண் செய்த செயல்… “noon party”- யில் நான்கு மணி நேரத்திற்கு மேல் நடந்த மது விருந்து!

சண்டையில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணாவர்கள் என்பது..
“நீ எப்படிடா என் ஆள அடிக்கலாம்” - நடுரோட்டில் பெண் செய்த செயல்… “noon party”- யில் நான்கு மணி நேரத்திற்கு மேல் நடந்த மது விருந்து!
Published on
Updated on
1 min read

நேற்று மாலை ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் ஒருவருக்கு ஒருவரை ஆபாசமாக பேசிக் கொண்டு, தாக்கி கொண்டனர். முதலில் அங்கிருந்த டீ கடையில் சண்டையிட்ட வாலிபர்கள் சிலர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட நிலையில் அவர்களுடன் இருந்த இளம்பெண் ஒருவரும் எதிர் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு “நீ எப்படிடா என் ஆள அடிக்கலாம்” என கேட்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வாலிபர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றுவதை அறிந்த அங்கிருந்த பாரின் பவுன்சர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்து வீட்டுக்கு அனுப்பினர். இந்த சண்டை குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சண்டையில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணாவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் நேற்று மதியம் “noon party” என்ற பெயரில் ராயப்பேட்டை சதயம் திரையரங்கிற்கு பின்புறம் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள LMu மதுபான பாரிற்கு வந்து மாலை நான்கு மணி வரை மது விருந்து நடைபெற்ற நிலையில் வெளியில் வந்த பெண்ணிடம் அவரது நண்பர் ஒருவர் தலை முடி பிடித்து இழுத்து வம்பு செய்திருக்கிறார். இதில் அந்த வாலிபருக்கு பெண்ணின் காதலனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் முதற்கட்டமாக காசி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர். நடுரோட்டிலில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் இவ்வாறு மது போதையில் பெண் ஒருவருக்காக வாலிபர்கள் சண்டையிட்டு கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களும் போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் வாலிபர்களுடன் சண்டை போடும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com