மினி வேன் மோதி உயிரிழந்த சிறுமி... தப்பியோடிய டிரைவர்...

தாம்பரம் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி மாணவி உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.
மினி வேன் மோதி உயிரிழந்த சிறுமி... தப்பியோடிய டிரைவர்...
Published on
Updated on
1 min read

சென்னை | தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிஷ்டிகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல் பள்ளிக்கு  இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிஷ்டிகா மீது மினி வேன் மோதியதில்  படுகாயம் அடைந்தார் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த சிஷ்டிகாவிற்கு அங்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் இல்லாததால் உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிஷ்டிகா பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய மினி வேன் ஓட்டுநர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

படப்பை வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் மிக முக்கியமான இந்த சாலையில், முறையான சிக்னல் எச்சரிக்கை பலகைகள் என எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ போக்குவரத்து காவல்துறையினரோ இல்லை எனவும் வாலாஜாபாத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விடுவதாலும் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் சிஷ்டிகா உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com