

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (70). இவர் கட்டிட மேஸ்திரி. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் மகன் கவின்குமார் சுகுமாரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த சுகுமாரனை கவின்குமார் மற்றும் வேப்பேரியை சேர்ந்த அவரின் நண்பர் நிதிஷ் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் சுகுமாரன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அவரை அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது கத்தியால் வெட்டிய நபர்களும் சந்தேகம் வராத வகையில் உடன் சென்றுள்ளனர். அதன் பிறகு சிலர் கொடுத்த தகவலின் பேரில் சுகுமாரனை கத்தியால் வெட்டியது கவின்குமார், நித்திஷ் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் நெமிலி போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் மேலும் இரு வாலிபர்கள் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது. தற்போது அவர்களையும் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சுகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாயுடன் தகாத உறவு வைத்திருந்த கட்டிட மேஸ்திரியை தனது நண்பர்களுடன் சேர்ந்து மகனே தீர்த்து கட்டியது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.