
சென்னையில் இரண்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்தியாஷ்ரம் பள்ளி வித்யா மந்திர் ஆகிய இரு பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக மோப்பநாய் பிரிவினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் பட்டினபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக சோதனை ஈடுபட்டதில் புரளி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக செம்மஞ்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.