செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!
Published on
Updated on
1 min read

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது சகோதரர் மனைவியை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா கட்டி வரும் புதிய வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். பின்னர் பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கரூர் புறவழிச்சாலையில் சுமார் 2 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com