“பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி” - மகன் சொன்னதைக் கேட்டு ஆடிப்போன தாய்.. ஈரோட்டில் பரபரப்பு!

மகனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படும் தனது தாயார் மீது ஆத்திரமடைந்த சிறுவனின் தாய்...
Grandmother POCSO Arrest
Grandmother POCSO Arrest
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், புதிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த  12 வயது சிறுவன், இவரது பெற்றோர்கள் சமையல் ஆர்டர்கள் எடுக்கும் வேலை செய்து வருகின்றனர். எனவே கல்யாண சமயங்களில் அதிக வேலைகள் இருக்கும் என்பதால் சிறுவனை, லக்காபுரத்தில் உள்ள அவரது தாய் வழி பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த ( செப் 12) ஆம் தேதி அன்று சிறுவன் பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வற்புறுத்திய போது அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் பதட்டமாக காணப்பட்டுள்ளார். 

இதனை கவனித்த சிறுவனின் தாய் பாட்டி  வீட்டிற்கு செல்லாதது ஏன்? மற்றும் ஏன்  இவ்வளவு பதட்டமடைகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுவன் அழுதுகொண்டே அவரது பாட்டி சிறுவன் 6 ஆம் வகுப்பு படித்தது முதல் தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, தனது மகனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படும் தனது தாயார் மீது ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று “என் அம்மா இப்படி பண்ணா” எதற்காக இப்படி செய்தீர்கள் என கேட்டு சண்டையிட்டிருக்கிறார். 

தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுவனின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12 வயது பேரனுக்கு சொந்த பாட்டியே பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com