
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாஜோதி மண்டல் இவருக்கு திருமணமாகி 38 வயதில் சிபானி தாஸ் என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டுக்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர். கணவரும் மகனும் கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலையில் சிபானி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் சிபானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தனிமையில் இருந்து அதற்கு குறிப்பிட்ட பணத்தை வாங்குவதை சிபானி வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனாலே சில சமயம் சிபானி வீட்டிற்கு கூட செல்வதில்லை என சொல்லப்படுகிறது.
இதே போல் கடந்த 10ம் தேதி இரவு சிபானியுடன் தனிமையில் இருக்க அவரை பெருந்துறை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தை சேர்ந்த வாழை தோட்டத்திற்கு இளைஞர்கள் அழைத்து சென்றுள்ளனர். போதையில் இருந்ததால் பேசிய பணத்தை கொடுக்காமல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
எனவே சிபானிக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிபானியை அவர் போட்டிருந்த துப்பட்டாவை வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சிபானியிடம் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்று விவசாயி அழுகி தலை பகுதியில் இருந்து புழுக்கள் வெளியேறும் நிலையில் சடலத்தை பார்த்துள்ளார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் சிபானி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து இரண்டு இளைஞர்களையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.