“காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்த செவிலியர்” - கொலையாளியுடன் கள்ளக்காதல்.. நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலத்தின் பின்னணி!

திருப்பூர் மாவட்டம், பல்லக்கவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார்...
Uthira Nurse Murder Case
Uthira Nurse Murder Case
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே காட்டுப் பகுதியில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவருடன் நெருங்கிப் பழகி வந்த இளைஞர் நகைக்காகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வெளியூரில் வேலைக்குச் செல்ல ரூ.3 லட்சம் தேவைப்பட்டதால், பெண்ணின் தாலிக்கொடியைப் பறிக்கத் திட்டமிட்டதாக அவர் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுப் பகுதியில் கடந்த (அக் 18) ஆம் தேதி நிர்வாண நிலையில் அழுகிய இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி 26 வயதுடைய உத்திரா என்பது தெரியவந்தது. பி.எஸ்சி. நர்சிங் படித்திருந்த அவர், திருப்பூர் மாவட்டம், பல்லக்கவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார்.

அவரது கணவர் ரஞ்சித்குமார் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இருவரும் வேலை தேடி திருப்பூர் மாவட்டத்துக்குச் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த (அக் 14) ஆம் தேதி வழக்கம் போல் உத்திராவை மருத்துவமனையில் விட்டுச் சென்ற அவரது கணவர், மாலையில் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார். அப்போது உத்திரா மருத்துவமனையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ரஞ்சித்குமார் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே, உத்திரா கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போலீஸ் விசாரணையில் உத்திரா பணியாற்றிய அதே தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சரவணன் என்பவருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உத்திராவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

erode hospital.
erode hospital.

சரவணன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின்படி, உத்திராவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதற்கிடையே, தனக்கு வெளியூரில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததாகவும், அந்த வேலைக்குச் செல்ல ரூ.3 லட்சம் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே உத்திரா அணிந்திருந்த நான்கு சவரன் தாலிக்கொடியைப் பறிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த (அக் 14) ஆம் தேதி மாலை உத்திராவின் கணவர் வருவதற்கு முன்பாக, அவரை மோட்டார் சைக்கிளில் விஜயமங்கலம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்கு இருவரும் உல்லாசத்தில் இருந்த பின்னர், உத்திராவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நான்கு சவரன் தாலிக்கொடியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக சரவணன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சரவணனிடமிருந்து உத்திராவின் நகையை போலீசார் மீட்டனர். பெருந்துறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அவரைக் கைது செய்து, பவானி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சரவணன் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com