”கிண்டர் கே சாட்” இப்படி ஒரு செயலியா...தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றிய இளைஞர்கள்!

”கிண்டர் கே சாட்” இப்படி ஒரு செயலியா...தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றிய இளைஞர்கள்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் செல்போன் செயலி மூலம் வாலிபர்களிடம் ஆபாசமாக பேசி பண பறிப்பில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கத்தியை காட்டி பணம் பறிப்பு:

புதுச்சேரியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

”கிண்டர் கே சாட்” செயலி:

இதையடுத்து போலீசார் தீபனிடம் நடத்திய விசாரணையில் ”கிண்டர் கே சாட்” என்ற செயலி மூலம் சிலர் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. மேலும் தன்னை தனிமைக்கு அழைத்ததாகவும், அப்படி ஒருவேளை தான் வர மறுத்தால், நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவாதாகவும் கூறி அந்த கும்பல் மிரட்டல் விடுத்ததாகவும், வேறு வழியின்றி நேரில் சென்ற என்னிடம் முகக்கவசம் அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்து சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை கைது செய்த போலீசார்:

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமு ,விஜயகுமார், முகிலன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com