“கணவனின் நண்பனுடன் உல்லாசத்தில் இருந்த மனைவி” - இருவரின் நெற்றியை துளைத்த துப்பாக்கி குண்டு… மகன் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்!

கொலை செய்து விட்டு தனது மகனிடம் “இனிமே எல்லாம் சரியாகிவிடும்” என தெரிவித்து தப்பி சென்றிருக்கிறார்...
faheem and shabnam
faheem and shabnam
Published on
Updated on
2 min read

உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் ட்ரோனிக்கா பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய ரஷீத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஷப்னம் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஷீத் தனது மனைவி மற்றும் அவரது நண்பரான ஃபாஹீம் என்பவரையும் தனது 7 வயது மகன் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு ரஷீத் வீட்டிற்கு சென்ற அப்பகுதி மக்கள் ஷப்னம் மற்றும் ஃபாஹீம் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷீத் தன்னுடன் வேலை பார்த்து வந்த ஃபாஹீம் என்பவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் அவர் அடிக்கடி ரஷீத் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்போது ரஷீத்தின் மனைவி ஷப்னத்திற்கு ஃபாஹீமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ரஷீத் வீட்டில் இல்லாத நிலையில் ஷப்னம் ஃபாஹீமுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது நண்பனுடன் மனைவி தகாத உறவில் இருப்பதை அறிந்த ரஷீத் இருவரையும் கண்டித்து அவர்களது உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த ரஷீத் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி அதன்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஃபாஹீமை தான் வீட்டிற்கு அழைத்த ரஷீத் இருவரையும் தனது வீட்டில் வைத்து ஏழு வயது மகன் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.

மேலும் கொலை செய்து விட்டு தனது மகனிடம் “இனிமே எல்லாம் சரியாகிவிடும்” என தெரிவித்து தப்பி சென்றிருக்கிறார். தொடர்ந்து தனிப்படை அமைத்து ரஷீத்தை கைது செய்த போலீசார் கொலைக்கான முழு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியையும் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியையும் கணவனே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com