குடும்ப தகராறு... குழந்தையுடன் தாய் தற்கொலை...!!

குடும்ப தகராறு... குழந்தையுடன் தாய் தற்கொலை...!!

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர்  அடுத்த கேசவபுரம் கரியன் தெருவை  சேர்ந்தவர் மணிவண்ணன்.  இவரது மனைவி சந்தியா.  அவரது வயது 27.  இவர்களுக்கு இரண்டு வயதில் கீர்த்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.

சந்தியாவுடன் அவரது கணவன் மற்றும் மாமியாருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில்  சந்தியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  தனது 2 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கணியம்பாடி தாலுகா காவல்துறையினர் குழந்தை மற்றும் சந்தியாவின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சவ கிடங்கிற்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக சந்தியாவின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை  காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் சந்தியாவுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களே ஆகியுள்ள நிலையில் தற்கொலை தொடர்பாக வேலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com