“தோழியுடன் கோவிலுக்கு சென்ற இஸ்லாமிய பெண்” - அடித்து காதை கிழித்து துன்புறுத்திய குடும்பம்.. மனைவியை பார்த்து கதறும் கணவர்!

ஷாகிரா தனது தோழிகள் சிலருடன் சேர்ந்து அமாவாசை அன்று கோவிலுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
“தோழியுடன்  கோவிலுக்கு சென்ற இஸ்லாமிய பெண்” - அடித்து காதை கிழித்து துன்புறுத்திய குடும்பம்.. மனைவியை பார்த்து கதறும் கணவர்!
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, நேரு தெருவை சேர்ந்தவர்  32 வயதுடைய ஷாகிரா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாரூக் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் ஷாகிராவின் அண்ணன் மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து இறைச்சி கடை வைத்து நடத்தி வந்திருக்கின்றனர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி எங்கு சென்றாலும் அதை ஷாகிராவின் அண்ணன் அமீரிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும் என அவரது பெற்றோர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

அதே போல கணவன் மனைவி எங்கு சென்றாலும்  அமீரிடம் அனுமதி பெற்று சென்று வந்திருக்கின்றனர். இதன் காரணமாக அமீர் மற்றும் பாரூக் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே பாரூக் தனியாக பிரிந்து வந்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஷாகிரா தனது தோழிகள் சிலருடன் சேர்ந்து அமாவாசை அன்று கோவிலுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. 

 கோவிலுக்கு சென்றதை அறிந்த ஷாகிராவின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர், அமிரீன் மனைவி சபூரா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஷாகிராவின் கணவர் பாருக்கை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷாகிராவை  கோவிலுக்கு அழைத்து சென்ற அவரது தோழியான வேண்டாமணி என்பவரை வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதை தட்டி கேட்ட ஷாகீராவை அடித்து உதைத்து அவர் அணிந்து இருந்த கம்மல், செயின் உள்ளிட்டவைகளை பறித்து சென்றுள்ளனர்.

அப்படி காதில் இருந்த கம்மலை அறுக்கும் போது காதில் காயம் ஏற்பட்டு சதை தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது.  அப்போது கையேடு வந்த சதையை   துணியில் மறைத்த உள்ளார் தாயார் சூர்யா. இதனால் காயம் அடைந்த ஷாகிரா நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் “இப்போ நடவடிக்கை எடுக்க முடியாது நீங்க போய் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி டிரீட்மென்ட் பாருங்க” என தெரிவித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட ஷாகிரா தன்னை  அடித்த தனது  தாய், அண்ணன், அண்ணி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும்  தன்னிடம் பறித்து சென்ற நகைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com