உத்தரபிரதேச மாநிலம், பாண்டா மாவட்டம் படவுசா பகுதியை சேர்ந்த சத்ய குமார் என்பவரது மகள் 19 வயதுடைய ஷிவானி. இவருக்கும் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கு 20 வயதுடைய லலித் வர்மா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி வெளியில் சுற்றி வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதலை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து பேசி வந்த ஷிவானி மற்றும் லலித் குமார் கடந்த (மே 18) ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை வெளியேறியுள்ளனர்.
பின்னர் இருவரும் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு தலைமைறைவாக இருந்த நிலையில் சத்ய குமார் தனது மகளை காணவில்லை என புகாரளித்திருக்கிறார். எனவே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் இருவரையும் கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த (ஜூன் 12) ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர் . மேலும் அதே சமயத்தில் ஷிவானி மற்றும் லலித் வர்மாவின் பெற்றோர்களையும் காவல் நிலையம் அழைத்துள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஷிவானி பெற்றோருடன் செல்ல மறுத்து காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்ய குமார் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து தனது மகள் ஷிவானியின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். அ இந்த திடீர் தாக்குதலால் காவல் நிலைய வளாகமே பரபரப்பில் மூழ்கியது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பெண்ணை உடனடியாக மீட்ட காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனையில் ஷிவானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பலாஷ் பன்சால் தெரிவித்ததாவது, காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பெண்ணின் தந்தை நடத்திய தாக்குதலிலேயே இளம்பெண் உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.