பட்டியலின மாணவரை தாக்கும் சக மாணவர்கள்...இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!

பட்டியலின மாணவரை தாக்கும் சக மாணவர்கள்...இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!

Published on

கரூா் மாவட்டத்தில் மாற்று சமூகத்தை சோ்ந்த மாணவரை சக மாணவா்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் அல்லியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சோ்ந்த ஜீவா என்பவர், உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவருக்கும் புலியூர் அரசு உதவி பெரும் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கும் பேருந்தில் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக, சக மாணவா்கள் சிலா் ஜீவா மற்றும் அவரது பாட்டியை சரமாாியாக தாக்கியுள்ளனா். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோ, மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com