
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. ஆய்வாளர் வீரகாந்தி சில நாட்களுக்கு முன்பு அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில் கீரனூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடன் விசாரணை செய்தும் புகார் கொடுத்த பெண் போலீசாரிடம் ரகசிய வாக்குமூலத்தை ஏ.டி.எஸ்.பி. லாவண்யா புகாராக பெற்றார். அதனை தொடர்ந்து பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீர காந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் புகார் தொடர்பாக ஆய்வாளர் வீர காந்தி ஏற்கனவே திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். தற்போது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.