புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்திற்கு, "வன்முறையான உடலுறவு" தான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
56 வயதான பிராட்லி ஷான் ஷாடக், 62 வயதான லின் அலேன் ஷாடக்கின் மரணம் தொடர்பாக, இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கட்ஜோ கீயில் உள்ள மரகாய்போ லேனில் அமைந்துள்ள தம்பதியரின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 6 மணிக்குச் சற்று முன்னதாக, கணவர் சார்பாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் 911- க்கு அழைத்ததை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். பிராட்லி ஷாடக், போர்வையை அணிந்துகொண்டு, ஆடையின்றி தனது வீட்டு வாசலுக்கு வந்து, "911-க்கு கூப்பிடு; என் வீடு முழுக்க ரத்தமா இருக்கு, எங்க வேற இடத்துலயும் ரத்தம் படிஞ்சு இருக்கு, சொல்லு, உடனே வந்துடுறேன்" என்று மிரட்டியதாக பக்கத்து வீட்டுக்காரர் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்துள்ளார்.
கைது அறிக்கையின்படி, அங்கு வந்தடைந்த துணை அதிகாரிகள், அந்த இல்லம் முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருந்ததைக் கண்டுள்ளனர். பல பொருட்கள், கருவிகள் ஆகியவை உடைந்து வீடு முழுவதும் சிதறிக் கிடந்துள்ளது. தரை முழுவதும் இரத்தமும் இரத்தக் கறைகளும் காணப்பட்டன. அத்துடன் வரவேற்பறையின் மையத்தில் ஒரு பெரிய இரத்தக் குளமே இருந்துள்ளது.
சட்ட அமலாக்க அதிகாரிகள், கணவரை "முற்றிலும் நிர்வாணமாக, ஒரு போர்வையால் மட்டுமே மூடப்பட்டிருந்த நிலையில்" கண்டறிந்தனர். மனைவி, இரத்தம் மற்றும் காயங்கள் நிறைந்த நிலையில், நிர்வாணமாக ஒரு தாழ்வாரத்தில் சுயநினைவின்றி கிடந்ததாகவும், ஆனால் சுவாசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவரிடம் அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அவர், "இது இப்பதான் நடந்தது" என்று கூறியதாகவும், ஆனால், "சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க மறுத்து, தனது மனைவிக்கு உதவி தேவை என்று மீண்டும் மீண்டும் கூறினார் எனவும் கூறப்படுகிறது. மனைவி லோவர் கீஸ் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் அன்று காலை தனது காயங்களால் உயிரிழந்ததாகவும் ஷெரிஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பறிவாளர்கள் விசாரித்தபோது, பிரதிவாதி, முந்தைய நாள் இரவு தானும் தனது குடும்பத்தினரும் ஒரு உணவகத்தில் "உணவும் நிறைய பானங்களும்" அருந்தியதாகவும், அதன் பிறகு 'வன்முறையான உடலுறவின்' காரணமாகத் தங்கள் வீடு அலங்கோலமாக இருந்ததாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது.
"குடிக்கும்போது மயங்கி விழுந்துவிடுவதாகவும், எதுவும் நினைவில் இருப்பதில்லை என்றும் பிராட்லி கூறினார்," என ஒரு துணை அதிகாரி குற்றப்பத்திரிகையில் எழுதியிருந்தார். "உதவி கேட்டுத் தன் பக்கத்து வீட்டுக்குச் சென்றது பிராட்லிக்கு நினைவில் இல்லை. அதன்பிறகு பிராட்லி ஒரு வழக்கறிஞரைக் கேட்டார்."கைது அறிக்கையின்படி, பிராட்லி ஷாடக் 911 எண்ணுக்கு அழைக்குமாறு கோருவதற்காக அண்டை வீட்டுக்குச் செல்லும் காணொளிக் காட்சிகளில், அவர் "ஈரமாக இருப்பது போலவும், ஒருவேளை குளித்துவிட்டு வந்திருக்கலாம் என்பது போலவும்" தெரிந்திருக்கிறது.
அதிகாலை 4 மணிக்கு மேல், அவர் வேறொரு அண்டை வீட்டுக்காரரின் கதவுகளையும் ஜன்னல்களையும் தட்டும் காட்சி மற்றொரு காணொளியில் தெரிகிறது.அந்த இல்லத்தில் மேலும் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாக ஷெரிஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"வீடு முழுவதும் இரத்தம் சிதறிக்கிடந்தது. முன் வாசலிலிருந்து தொடங்கி, பிரதான வரவேற்பறை வரை இரத்தக்கறை படிந்த கைகள் மற்றும் தரையில் இரத்தக் குளம் போன்றவை இருந்தன," என்று அந்த அறிக்கை கூறுகிறது. "பாதிக்கப்பட்டவரை குளியலறைக்கு இழுத்துச் சென்றது போல, பிரதான தாழ்வாரத்தின் தரையில் இரத்தக்கறை படிந்திருந்தது. கழிவறை மற்றும் குளியல் தொட்டி ஆகியவற்றின் மீது இரத்தக்கறைகள் இருந்துள்ளது.
பிராட்லி ஷாடக்கிற்கு படகு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் நீண்ட குற்றப் பதிவு உள்ளது. அதைத் தவிர, அவருக்கு வேறு எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கைது அறிக்கையை எழுதிய துணை அதிகாரி, "பாதிக்கப்பட்டவர் தனது கணவருடன் சண்டையும் போராட்டமும் நடந்தது" என்பதை ஆதாரங்கள் காட்டுவதாக இறுதியில் முடிவுசெய்தார், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறிதும் காயமடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.